Breaking News

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று (29) மேலும் உயர்வை பதிவு செய்துள்ளன.

 உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று (29) மேலும் உயர்வை பதிவு செய்துள்ளன.



சமீபத்திய சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.86 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.


அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.31 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


இதேநேரம், இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.309 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.


உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் இந்த விலை உயர்வு, எரிபொருள் இறக்குமதி செலவுகள், போக்குவரத்து, தொழில்துறை மற்றும் மின்சார உற்பத்திச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்