Breaking News

பெல்ஜியம் புரூசலில் "உரிமைக்காக எழுதமிழா 2026" மாபெரும் ஈழத்தமிழர் போராட்டப் பேரணி!

 பெல்ஜியம் புரூசலில் "உரிமைக்காக எழுதமிழா 2026" மாபெரும் ஈழத்தமிழர் போராட்டப் பேரணி!



ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமான பெல்ஜியம் புரூசலில், கடந்த ஜூன் 22, 2026 அன்று "உரிமைக்காக எழுதமிழா 2026" என்ற முழக்கத்துடன் மாபெரும் போராட்டப் பேரணி நடைபெற்றது.


ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்த புலம்பெயர் ஈழத்தமிழர்கள், தமிழின அழிப்பிற்கு நீதியும் சுதந்திர தமிழீழத்திற்கான அங்கீகாரமும் வேண்டி இப்போராட்டத்தை நடத்தினர்.


பறை முழக்கங்கள், பதாகைகள் மற்றும் தமிழீழ தேசியக்கொடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி, சர்வதேச அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.


நிகழ்வில் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, போர் மௌனித்து 17 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காததைச் சுட்டிக்காட்டி கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.


தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தும் பிரகடனம் வாசிக்கப்பட்டது.


தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) ஏற்பாட்டில், TCC, IDCET, ICET ஆகிய அமைப்புகளின் கூட்டு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போராட்டம், "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற முழக்கத்துடன் நிறைவடைந்தது.