மாதங்களில் $1,287 மில்லியன் ஏற்றுமதி வருமானம் ஈட்டியது இலங்கை!
4 மாதங்களில் $1,287 மில்லியன் ஏற்றுமதி வருமானம் ஈட்டியது இலங்கை!
==============
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் இலங்கை 1,287 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக ஈட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
இவ் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தில் 22 சதவீதத்தைச் சேவைத்துறை (Service Sector) பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதித் துறை நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாகவும், இதில் சேவைத்துறையின் பங்களிப்பு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
