Breaking News

மனற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்......!



மனற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்......!




யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு மனற்காட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மனற்காட்டு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது 



குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் மனற்காட்டு பங்கு தந்தை அவர்களால் விசேட வழிபாடு ஒன்று வழங்கப்பட்டது பின்னர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது 



நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது 



அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும்அகவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பபட்டது 



குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள் புலம்பெயர் மக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் காண்டீபன் மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டனர்