யாழில் எமது தலைமுறை கட்சி அறிமுகம். 25 மாவட்டங்களையும் பிராதிநிதித்துவப்படுத்துவோம்... தலைவர் கருணாநிதி தெரிவிப்பு.
யாழில் எமது தலைமுறை கட்சி அறிமுகம். 25 மாவட்டங்களையும் பிராதிநிதித்துவப்படுத்துவோம்... தலைவர் கருணாநிதி தெரிவிப்பு.
யாழில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கட்சியாக எமது தலைமுறை காட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றேல் குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 25 மாவட்டங்களையும் இலக்காகக் கொண்டு எமது புதிய கட்சி தேர்தலில் களமிறங்க உள்ளது.
அதற்கான வேலைத் திட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் நமது கட்சியின் முதலாவது ஊடக சந்திப்பை நடத்தி இருக்கிறோம்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்படாமல் காணப்படுகிறது இதற்கு தமிழரசியல் வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.
ஏனெனில் தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு ஏற்ற தொழிற்சாலைகளை வடக்கு மாகாணத்தில் கட்டி எழுப்பாமல் விட்டது இவர்களுடைய தவறு.
வட மாகாணத்தில் பல பிரபல்யமான பல தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில் அதனை யுத்தத்திற்கு பின்னர் தமிழ் தலைமைகள் மறுசீரமைக்க முடியாமல் போனது ஏன்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் அவரது அரசியல் வித்தியாசமானது தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது கட்சி அதிகாரத்தை கப்பற்ற வேண்டும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை அவருடைய நோக்கம்.
அதை அவர் தெளிவாக செய்கிறார் இவ்வாறு ஏனைய கட்சிகளும் தமது தேவைகளுக்காக தமிழ் மக்களை பயன்படுத்துகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்தவரையில் அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது அனுரா என்கின்ற ஒரு நபருக்காக மட்டுமே அதை அந்தக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்து விடக்கூடாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நான் மிக நல்லது என கூற மாட்டேன் கடந்த அரசாங்கங்களை விட ஓரளவு பரவாயில்லை என்றே கூறுவேன்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு முன்னர் அவர்களை பொருளாதார ரீதியாக வலுவான நிலைக்கு இட்டுச் செல்வதற்கு என்னால் இயன்றவரை முயற்சிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்
