மேற்கு வங்கத்தில் ஹஜ் பெருநாள் விடுமுறையை 2 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்த பாஜக அரசு .....
மேற்கு வங்கத்தில் ஹஜ் பெருநாள் விடுமுறையை 2 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்த பாஜக அரசு
.....
மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பெருநாளைக்கான அரசாங்க விடுமுறை நாட்களை பா.ஜ.க அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, இதற்கு முன்னர் இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த ஹஜ் பெருநாள் விடுமுறை, தற்போது ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம், ஹஜ் பெருநாளுக்கு முந்தைய நாளையும் உத்தியோகபூர்வ விடுமுறை நாளாக அறிவித்திருந்தது. தற்போது அம்மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு, அந்த முந்தைய நாள் விடுமுறையை ரத்து செய்து இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
