மாகாண தரப்படுத்தலில் கல்முனை வலயம் முன்னேற்றம்...! வலய கல்விப் பணிப்பாளர் பாராட்டு...
மாகாண தரப்படுத்தலில் கல்முனை வலயம் முன்னேற்றம்...!
வலய கல்விப் பணிப்பாளர் பாராட்டு...
(ஜெஸ்மி எம்.மூஸா)
அண்மையில் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரப்படுத்தலி்ல் கிழக்கு மாகாணத்தில் 7 ஆவது இடத்தில் இருந்த கல்முனை வலயம் தற்போது 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
சித்தி வீதம் ஒன்றால் அதிகரித்துள்ளதுடன் 3A அடைவில் கடந்த வருடம் 76 ஆக இருந்த எண்ணிக்கை 88 ஆக மாறியுள்ளது
3S தரப்படுத்தல் கணிப்பில் ஏற்பட்டுள்ள இமுன்னேற்றத்துடன் "w" இன் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வரும் வலய மட்ட தரிசிப்புகள், வெளிவாரி மதிப்பீடுகளின் மிக நுணுக்கமான கண்காணிப்பு முறைகள் மூலமே இது சாத்தியமாகியுள்ளது
இதற்காக அர்ப்பணித்த சகல தரப்பினர்களுக்கும் வலய கல்விப் பணிப்பாளர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளதுடன் 2026 இல் இதன் அடைவுமட்டம் மேலும் வலுவான நிலைக்கு வர சகலரும் பணியாற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் வித்துள்ளார்.
