நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தாதிய விடுதி முகாமையாளரான தாதிய சகோதரி சித்தி சமாயிலா காஸிம் தாதிய மேற்பார்வை உத்தியோகத்தராக தாதியர் சேவையில் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தாதிய விடுதி முகாமையாளரான தாதிய சகோதரி சித்தி சமாயிலா காஸிம் தாதிய மேற்பார்வை உத்தியோகத்தராக தாதியர் சேவையில் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சாய்ந்தமருது மண்ணின் முதல் பெண் தாதிய உத்தியோகத்தராக இருந்து சாய்ந்தமருது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள இவர் முஹம்மது காஸிம் மற்றும் றஸீனா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவார்.
சித்தி சமாயிலா காஸிம் அவர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர் முஹம்மட் ஜாபிர் அவர்களின் மனைவியும் ஷைமத் ஜுஸ்லா, ஷமாகத் ஜெஸ்லான் ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.
தாதியர் துறையில் தடைகள் பல தாண்டி, சாய்ந்தமருதின் முதல் பெண் தாதியாய் தடம் பதித்து, மேற்பார்வை பெண் தாதியாய் (Nursing Matron) பதவி உயர்வு பெற்றிருப்பது ஒரு மகத்தான மைல்கல்.
அவரின் அயராத உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் எமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்!❤️