Breaking News

யாழில் மாவட்ட ரீதியாக இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த கிபிஷாளினி!

 

யாழில் மாவட்ட ரீதியாக இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த கிபிஷாளினி!



வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பிரபாகரன் கிபிஷாளினி யாழ். மவட்ட ரீதியாக இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவர் யாழ்/ ஊர்காவற்துறை புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் க.பொ.த சாதாரணம் வரை கற்று க.பொ.த சாதாரண பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றார்.


அதன்பின்னர் உயர்கல்வியை யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் கற்று, உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றி 2ஏ பி சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக 2வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.


பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களின் வழிகாட்டல், அதிகளவான கடந்தகால பரீட்சை வினாத்தாள்களை பயிற்சி செய்து பார்த்தல், விசேட கருத்தரங்குகள் உள்ளிட்டவை மூலம் தான் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் கூறு

கின்றார்.