Breaking News

புனிதநகர் ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழா - 2026



புனிதநகர் ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழா - 2026




வராத்துப்பளை: வராத்துப்பளை புனித நகர் வைரவர் கோவில் ஆலய முன்றலில், புனிதநகர் ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி - 2026 மிகச் சிறப்பாக நடைபெற்றது.



இவ் நிகழ்வானது கல்வி நிலையத்தின் தலைவி திருமதி சி.கலைமகள் தலைமையில் நடைபெற்றதுடன்


இவ்விழா, தமிழர் பாரம்பரிய முறைப்படி இனிதே ஆரம்பமானது. விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் பாண்ட வாத்தியங்கள் முழங்க கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். 


அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் முறைப்படி தொடங்கின. வரவேற்பு உரையைத் தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாகத் ஆரம்பமானது 



விறுவிறுப்பான இல்லப் போட்டிகள்

இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் மாணவர்கள் பாரதி இல்லம் மற்றும் காந்தி இல்லம் என இரு அணிகளாகப் பிரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



நடைபெற்ற முக்கிய போட்டிகள்:

சாக்க ஓட்டம் மற்றும் ஓட்டப் போட்டிகள்.

ஒற்றைக் காலில் கெந்துதல்.

காலால் குச்சி எடுத்தல்.

தேசிக்காய் கரண்டி ஓட்டம்.

கையால் நீர் நிரப்புதல்.

வளையல் அணிதல்.

பாடசாலைக்கு ஆயத்தமாதல் (School Ready).

பழம் பொருத்துதல் போன்ற சிறுவர் விளையாட்டுக்கள் இடம்பெற்றன 



இவ் நிகழ்வின் நின பிரதம விருந்தினராக திரு இ.குகன்

அதிபர் தம்பசிட்டி மெ.மி.த.க.பாடசாலைஅவர்களும் மற்றும் 

சிறப்பு விருந்தினராக திரு ஜெய கோபி பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் அவர்களும் மற்றும் சி.வேந்தன் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு க.இளங்கோவன் அவர்களும் கலந்து கொண்டனர் 



மற்றும் இவ் விளையாட்டு நிகழ்வினை கண்டு கழிக்க பிரதேச மக்கள் இளைஞர்கள் யுவதிகள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்