மணல்காட்டுக்கு சுற்றுலா சென்றவர்களை பொலிஸார் தாக்கிய விவகாரம்.. மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
மணல்காட்டுக்கு சுற்றுலா சென்றவர்களை பொலிஸார் தாக்கிய விவகாரம்.. மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
பருத்தித்துறயில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தெரிய வருவதாவது மணல் காட்டுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் குழு ஒன்றை சிவில் உடையில் பொலிஸ் வாகனத்தில் சென்ற பொலிஸார் தாக்குதல் நடாத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
இதில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இன் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்குதலில் காயமடைந்த மூவரிடமும் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அதிகாரிகள் மந்திகை வைத்தியசாலையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது
