காரசாரமாக இடம்பெற்ற வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!
காரசாரமாக இடம்பெற்ற வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று காலை 9:00 மணியளவில் வராமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் வடமராட்சி வடக்கில் மேற்கொள்ள வேண்டிய வேலை திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கல், போக்குவரத்து, விடயங்கள், மின் விளக்கு பொருத்துதல், திக்கம் பகுதியில் பனங்கள் அடைப்பு நிலையம் அமைத்தல், பனங் கள் அடைத்தலுக்கு மது வரி திணைக்களத்தால் விதிக்க பட்ட வரி தொகைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வல்வெட்டிதுறை பகுதியில் சட்டத்திற்கு முரணாக குறிப்பாக கரையோர பாதுகாப்பு, மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டங்கள், மற்றும் நகர சபை சட்டங்களை மீறியதற்காக அதனை இடித்து அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதே, ச கிராம மட்ட மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
