முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திரவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திரவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு..!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இன்று (13.03.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். எனவே அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவையென அதிகாரிகள் கோரினர்...
.
