Breaking News

யாழ் மருத்துவ சங்கமும் யாழ் மருத்துவ பிரதிநிதி சங்கமும் இணைந்து நடத்தும் 3வது இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த இலவச மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர், குழந்தை நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர், மகப்பேறு மற்றும் பெண் நோய்கள் நிபுணர், தோல் வைத்திய நிபுணர் மற்றும் பொது மருத்துவ நிபுணர் போன்ற வைத்திய நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் குருதிப் பரிசோதனை மற்றும் உடற் திணிவுச் சுட்டி போன்றவையும் கணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.