நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று காலை சடலமாக மீட்பு.
நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று காலை சடலமாக மீட்பு.
புத்தளம், தில்லையடி -ரத்மல்யாய, 4ம் குறுக்குத்தெருவில், வசித்து வந்த ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரே இனம் தெரியாதோரால் கொலை சொய்யப்பட்ட நிலையில் இன்று (22/02/206 ) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று (21.02.2026) இரவு 9.00 மணியளவில் தனது YB 6811 இலக்க சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்றவர், நேற்று இரவிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் அவரது உறவினர்களால் நேற்று இரவு முதல் தேடப்பட்ட நிலையில்
இன்று (22/02) காலை தில்லையடி, ரத்மல்யாய - அல்காசிமி சிட்டி( 600 வீட்டுத்திட்ட) பிரதான வீதியினூடாக
- கல்லடி நோக்கிச்செல்லும் உள்வீதியின் தோட்டப்பகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டி வேரொரு பகுதியான அல்கஸிம்சிட்டியின் பின்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
