Breaking News

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி காரணமாக இருந்தவர்கள் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க பட வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கண்டனம்.......!



சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி காரணமாக இருந்தவர்கள் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க பட வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கண்டனம்.......!



மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லை தாங்காமல் முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று தனது கடனை கட்டியுள்ளார் கடனை கட்டிய பின்னரும் முன்னாள் போராளிக்கு கந்துவட்டி கும்பல் தொடர்ந்து கடன் கட்டவில்லை என மிரட்டல்கள் விட்டுள்ளனர் 


இச் சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 


தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர் அடக்கு முறைக்கும் தமது இளமை காலத்தை முழுவதும் போராட்டத்தில் கழித்து இப்போது தமது குடும்ப வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்து கொண்டுள்ள முன்னாள் போராளிகளின் நிலமை தற்போது கேளிக்கை யாகவும் வருத்தமாகவும் உள்ளது 


குறிப்பாக தமது அன்றாட வாழ்வாதாரத்தை கட்டி யெலுப்ப முன்னாள் போராளிகள் பல சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் 


அதன் அடிப்படையில் தமது குடும்ப வாழ்க்கையில் தாம் ஒவ்வொரு நாளும் குடும்ப சுமையை நகர்த்தி செல்வதற்கு தமது வருமானம் போதாத காரணத்தால் கடன் மற்றும் சீட்டு போன்ற நடவெடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் 


இதனை எவ்வாறு ஏமாற்றுவது மற்றும் கடன் கொடுத்து எவ்வாறு வட்டி மேல் வட்டி போடுவது மற்றும் தமது சொந்த தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது எனும் வஞ்சக போக்கில் ஒரு கந்துவட்டி கும்பல் இயங்கி வருகிறது 


அதன் விளைவாகவே மண்ணுக்காக போராடிய இந்த பெண் போராளி தனது சிறு நீரகத்தை விற்கும் நிலை ஏற்பட்டது இதன் விளைவு தற்போது உலக நாடுகள் முழுவதும் வியக்க வைத்துள்ளது 


கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்து வட்டி கும்பலும் கைது செய்யப்பட்ட வில்லை ஆனாலும் இந்த கந்துவட்டி கும்பலை விட்டு விட்டு இந்த சமூகம் வறுமைக்கு தள்ள பட்ட முன்னாள் போராளியை விமர்ச்சிக்கிறது 


நாம் எவ்வாறான சூழலில் வாழ்கின்றோம் என பார்க்கும் போது எமக்கு வெட்கமாக உள்ளது தற் காலத்தில் கடன் தொல்லை தாங்காமல் நமது தமிழர் நிலப்பரப்பில் தொடர் தற்கொலை அதிகரித்து செல்கிறது 


இது ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை இல்லை ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நடந்த கொடுமை இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் 


மற்றும் இந்த ஜனநாயக நாட்டில் கந்து வட்டியில் ஈடுபடும் கும்பல்களுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து முற்றாக கந்து வட்டி இல்லாத ஒரு திரு நாட்டை உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் இனைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்