Breaking News

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப் பாலத்தல் இருந்து ஆரம்பமாகியது.

 இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப் பாலத்தல் இருந்து ஆரம்பமாகியது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.