சட்டத்திற்கு முரணாக பருத்தித்துறை நகர சபையால் போடப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் வீதி......!
சட்டத்திற்கு முரணாக பருத்தித்துறை நகர சபையால் போடப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் வீதி......!
பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில் இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றினை பருத்தித்துறை நகர சபையின் தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது
குறித்த வீதியானது சட்டத்திற்கு முரணாகவும் பருத்தித்துறை பிரதேச சபையின் எந்தவித அனுமதியின்றியும் 22 மீட்டர் கொங்கிறீட் வீதி பருத்தித்துறை நகரசபையின் தவிசாளரின் அனுமதிக்கமைவாக நேற்று இரவு போடப்பட்டுள்ளது
இந்த சம்பவமானது உள்ளூராட்சி சட்டவரம்பை மீறியே அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் உட்பட்ட மக்களின் பணம் வீனாக பயண்படுத்த பட்டுள்ளதாகவும் மக்கள் விசணம் தெரிவித்துள்ளனர்
இதனால் அயலில் வசிக்கும் வீடுகளுக்கு மழை காலங்களில் வெள்ள நீரோட்டங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதோடு குறித்த இடத்தில் வாழும் மக்கள் எதிர் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
