ஒருங்கிணைப்பு தலைவரையும், வடராட்சி கிழக்கையும் புறக்கனிக்கும் போக்குவரத்து சபை..!
ஒருங்கிணைப்பு தலைவரையும், வடராட்சி கிழக்கையும் புறக்கனிக்கும் போக்குவரத்து சபை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தையும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரது உத்தரவையும் தொடர்ச்சியாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை புறக்கணித்து வருகின்றது.
அண்மையில் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்ககான போக்குவரத்து குறைபாடுகள் தொடர்பில் ஓருங்கிணைப்பு குழு தலைவரிடம் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தனர். இத்தனடிப்படையில் கஷ்ட மற்றும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை ஒழுங்காக மேற்கொள்ளுமாறும், புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபாடுத்துமாறும், இலங்கைபோக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு பணித்திருந்தார். ஆனாலும் அவரது பணிப்பை கருத்தில் கொள்ளாத பருத்தித்துறை சாலை அதிகாரிகள் தாம் நினைத்தவாறு வருமானம் கூடிய 750 போன்ற வழி தடங்களுக்கு ஒழுங்காக புதிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றனர். பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை இறுதி சேவையாக 6:15 மணிக்கு பருத்தித்துறை நகரிலிருந்து புறப்படும், ஆனால் இன்று அது 7:10 மணிக்கே தனது சேவையை ஆரம்பித்தது. இவ்வாறான ஒழுங்கீனமான வராத்தில் பலத்தடவைகள் இடம்பெற்று வருகின்றதுடன் ஒரு நாளைக்கு பல தடவைகள் இடையிடையே பழுதடைந்து மக்கள் பேருந்துகளை மக்கள் தள்ளித்திரிகின்ற நிலைமையும் தொடர்கின்றன
இதேவேளை பருத்தித்துறை கேவில் வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கடடைக்காடு கிராமத்துடன் நிறுத்த படுவதால் மாணவர்கள் உட்பட பலரும் பெரும் சிராமங்களை எதிர்நோக்கி வருகின்றன அதேவேளை காலை பருத்தித்துறை சாலையிலிருந்து மருதங்கேணி ஊடாக வவுனியா செல்லும் பேருந்தும், பருத்தித்துறை யிலிருந்து இரவு 8:00 மணிக்கு மருதங்கேணி ஊடக கொழும்பு செல்லும் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
தனியார் போக்கவரத்து சேவைகளும் சரியாக ஈடுபடுவதில்லை. குறிப்பாக பருத்தித்துறையிலிருந்து கேவிலுக்கு செல்லும் தனியார் பேருந்து நண்பகல் 12:30 மணிக்கு பின்னர் இடம்பெறுவதில்லை. நாக்கார்கோவில் பருத்தித்துறை போக்குவரத்து சேவையும் பல வருடங்களாக இடம்பெறுவதில்லை. இது தொடர்பாக தனியார் போக்குவரத்துக்கு அதிகார சபைக்கு பலதடவைகள் முறைபாடு செய்யப்பட்டும் அவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் மக்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஏனெனெனில் குறித்த குறைபாடுகள் பல வருடங்களாக காணப்படுகிறது.
