தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழில் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியடியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பி
டத்தக்கது.
