Breaking News

கிளிநொச்சி பகுதியில் இறந்த நிலையில் யானை.....!



கிளிநொச்சி பகுதியில் இறந்த நிலையில் யானை.....!






கிளிநொச்சி கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 


குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 


வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

 வருகின்றனர்.