Breaking News

மருதங்கேணி-பருத்தித்துறை பிரதான வீதிக்கு இந்த வருடத்தில் தீர்வு-ரஜுவன் எம்பி

 மருதங்கேணி-பருத்தித்துறை பிரதான வீதிக்கு இந்த வருடத்தில் தீர்வு-ரஜுவன் எம்பி



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை பிரதான வீதி இந்த வருடத்திற்குள் திருத்தப்படுமென வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜுவன் எம்பி தெரிவித்துள்ளார்


வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவருகின்றது 


இதன்போது மக்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் 


கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.மருதங்கேணி பருத்தித்துறை வீதியானது தற்போது பாழடைந்துள்ளது.இதனால் நோயாளார்கள் தொடர்கம் அதிகளவான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்


இதற்கு தீர்வு காணும் வகையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

இந்த வருட இறுதிக்குள் குறித்த வீதி தேவை பூர்த்தி செய்யப்படுமென ரஜீவன் எம்பி தெரிவித்தார்


இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்பி ஊழல் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் முன்வைத்த பல விடயங்கள் இன்னும் விசாரணை செய்யப்படவில்லையென தெ

ரிவித்தார்