ஆழிப்பேரலை நினைவு நாளில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்-தவிசாளர் யுகதீஸ் கண்டனம்
ஆழிப்பேரலை நினைவு நாளில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்-தவிசாளர் யுகதீஸ் கண்டனம்
சுனாமி நினைவு நாளில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவிருப்பது வேதனை அளிப்பதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 2004ம் ஆம் ஆண்டு முழு இலங்கையையும் புரட்டிப்போட்ட ஆழிப்பேரலை மூலம் அதிகளவான மக்கள் காவு கொள்ளப்பட்டனர். குறிப்பாக வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் அதிகளவான மக்கள் கொல்லப்பட்டனர்
இவர்களை இழந்த உறவுகள் நாளைய தினம் இவர்களை நினைத்து அஞ்சலிக்க உள்ளனர்
ஆனால் இந்த துக்க நாளில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார்கள் இது ஒரு மன வேதனையான விடயம்
இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் உண்மையில் தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்று தெரியவில்லை முழு இலங்கையும் இழந்த தமது உறவுகளை நாளைய தினம் அஞ்சலிக்கவிருக்கிறது
எமது வடமராட்சி கிழக்கு மண்ணில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆழிப்பேரலை மூலம் இறந்திருந்தார்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது மிகவும் மன வருத்தத்துக்குரியது.நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவி
த்தார்.
