Breaking News

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் முருகநாம பஜனை.

 சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் முருகநாம பஜனை.

 


யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது. 


இதில் முருகன் அடியார்களினால் “முருகநாம பஜனை” நிகழ்த்தப்பட்டது. 

ஹார்மோனிய இசையின் இசைக்கலைமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், 

தபேலா இசையினை வித்துவான் மகேந்திரம் பிரபா அவர்களும், 

ஒக்ரபாட் இசையினை வித்துவான் அ.கேதீஸ் வழங்கினர்.


இன்றைய இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்