Breaking News

காரைதீவு பிரதேச சபையின்(பஜெட்) வாக்கெடுப்பில் அமோக வெற்றி

 காரைதீவு பிரதேச சபையின்(பஜெட்) வாக்கெடுப்பில் அமோக வெற்றி



 அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்ட நிதியறிக்கை இன்று (16) செவ்வாய்க்கிழமை பிரதேச சபை யின் தவிசாளர் சு.பாஸ்கரன்( Paskaran Tamilan ) தலைமையில் நடைபெற்ற வேளையில் 08 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றது.


 அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி தவிசாளர் சபையை ஆரம்பித்தமையை தொடர்ந்து த.விடுதலை பு**..லி**களின் ஆலோசகர் அமரர் கலாநிதி அண்டன் பாலசிங்கத்திற்கு முன்னாள் தவிசாளர் கி்.ஜெயசிறில் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 2நிமிட மௌன அஞ்சலியும் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் அமரர் செல்லையா இராஞதுரை அவர்களுக்கு சபை உறுப்பினர் ச.சிவகுமார் அவர்களின் வேண்டுகோளிற்க்காக 2 நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றன.


   அத்துடன் சபை உறுப்பினர்களினால் குறைநிறைகளுடன் கூடிய பல சுய விவாத கருத்துக்களையும் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

  

11உறுப்பினர்கள் கொண்ட சபையில் தமிரசு கட்சி சார்பாக 03 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 02 உறுப்பினர்களும் இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும் சுயட்சை குழு சார்பாக 01 உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.