குடத்தனை வடக்கு மக்களால் முல்லை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி.....!
குடத்தனை வடக்கு மக்களால் முல்லை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி.....!
கடந்த மாதம் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இலங்கை முழுவதும் பல பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகளவான இடங்கள் பாதிக்கப்பட்டது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் குடத்தனை வடக்கு தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் வாழும் மக்கள் இணைந்து பெருந்தொகையான பணம் சேகரிக்கப்பட்டு பல பகுதிகளில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் இன்றைய தினம் (23) முல்லைத்தீவு குமுள முனை கிழக்கு பகுதியில் அதிகமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை கிராம உத்தியோகத்தரின் தெரிவின் அடிப்படையில் 100 குடும்பங்களுக்கு குடத்தனை வடக்கு மக்களின் நிதி உதவியில் ரூபா 500000 பெறுமதியான நிவாரண உதவி வழங்கப்பட்டது
இவ் நிகழ்வில் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குமுள முனை கிழக்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் குடத்தனை வடக்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
