ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்
ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட உத்தியோகஸ்தர் குழுவின் ஆராய்ச்சி அதிகாரியாக (Research Officer), ஓட்டமாவடியைச்சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி எம்.என்.எம்.யஸீர் அறபாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை, பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார். இது ஒரு விசேட நியமனம் என்பது குறிப்பிடத்தக்கது.
