அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு..!
அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு..!
அமெரிக்காவிற்குள் 'TikTok' தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மூன்று முக்கிய முதலீட்டாளர்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக TikTok தலைமை நிர்வாக அதிகாரி ஷோவ் சி செவ் (Shou Zi Chew)தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் TikTok இன் செயல்பாடுகள் தொடர்பாகக் கடுமையான சர்ச்சைக்குரிய சூழல் நிலவி வந்தது.
அந்த சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அப்போதைய ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படும் TikTok செயலியைத் தடை செய்யக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
TikTok இன் அமெரிக்க உரிமையை அதன் சீன உரிமையாளர்கள் விற்பனை செய்யாவிட்டால், அந்தச் செயலியை அமெரிக்காவில் தடை செய்யும் சட்டம் ஜனவரி 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது.
இதற்கமைய, ByteDance நிறுவனம் 'TikTok USDS Joint Venture LLC' என்ற பெயரில் புதிய கூட்டு வணிகத்தை உருவாக்குவதற்காக Oracle, Silver Lake மற்றும் MGX ஆகிய மூன்று முதலீட்டாளர்களுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டிக்டொக் அமெரிக்க வணிகம்
