Breaking News

சுனாமி 21 வது ஆண்டு நினைவு தினம் வத்திராயன் சுனாமி நினைவாலயத்தில் அனுஷ்டிப்பு......!



சுனாமி 21 வது ஆண்டு நினைவு தினம் வத்திராயன் சுனாமி நினைவாலயத்தில் அனுஷ்டிப்பு......!



 21 வது சுனாமி நினைவேந்தல் வத்திராயன் ஆழிப்பேரலை கட்டமைப்பு குழுவின் ஏற்பாட்டில் வத்திராயன் சுனாமி நினைவாலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.


இதில் பொதுச்சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் வி யெ நிதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார் பின் நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் சுடர் ஏற்றி ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது



இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்