அடுத்த தலைமுறை தலைவர்கள் எனும் 100 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி..!
அடுத்த தலைமுறை தலைவர்கள் எனும் 100 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி..!
வடராட்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்படும் தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழான
அடுத்த தலைமுறை தலைவர்கள் எனும் 100 மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்
இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில்
வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலமையில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பண்பாட்டு வரவேற்பு, மற்றும் பாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, வலய கொடி என்பன ஏற்றப்பட்டு , மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
முன்னதாக இலங்கையின் பிரபல கராத்தே ஆசிரியரும், யோகா ஆசிரியருமான இரட்ணசோதி அவர்கள் தலமையில் யோகாசன பயிற்சியும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுகள் பிற்பகல் 6 ,மணிவரை இடம்பெறவுள்ளன.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பட்ரிக் டி
ரஞ்சன், சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ஜெயச்சந்திரன்,மருதங்கேணி கோட்ட கல்வி பணிப்பாளர் சிறிராமசந்திரன் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை அதிகாரிகள், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளன
ர்.
