Breaking News

தமிழர் பிரதேசத்தில் T56ரக ஆயுதம் கண்டுபிடிப்பு....!

தமிழர் பிரதேசத்தில் T56ரக ஆயுதம் கண்டுபிடிப்பு....!



கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் கடந்த 2 ம் திகதி T56ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடந்த இரண்டாம் திகதி மனிதாபிமான கன்னி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ டிரஸ்ட் நிறுவனம் தமது பணியினை இத்தாவில் பகுதியில் மேற்கொண்ட போது குறித்த துப்பாக்கியினை அவதானித்துள்ளனர் 


அதன் பின்னர் உடனடியாக பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் முறைப்பாடினை பளை பொலிஸால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதனை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்



செய்தியாளர் 

பூ.லின்ரன்