Breaking News

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்! 



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ் தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை 3.00 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினார், 


பாராளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.   


தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். 


எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும், என சிறீதரன் எம்.பி தெரிவித்

தார்.