பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் இடம் பெற்ற தலைமைத்துவ பயிற்சி.......!
பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் இடம் பெற்ற தலைமைத்துவ பயிற்சி.......!
பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் நேற்றைய தினம் (29) அன்று மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்றது.
இப்பயிற்சி ஆனது வடமராட்சி யா/பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் நேற்றைய தினம் 1.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை இடம்பெற்றது தலைமைத்துவ பயிற்சியானது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் மாணவர்களுக்கு இடையே ஏற்படுகின்ற மனக்குழப்பம் தலைமைத்துவம் மற்றும் குழுவாக செயற்படுகின்ற தன்மை போன்ற அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்
.இந் நிகழ்வினை அருட்சகோதரர் ஜோர்ச் கிங்டன் அவர்கள் நெறிப்படுத்தி இருந்தார்.இந் நிகழ்வில் மேலும் பல விளையாட்டுக்கள் ஊடாக பல சிந்தனைகளும் தகவல்களும் மாணவிகளிடையே வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்ததுடன் இந் நிகழ்வின் ஊடாக மாணவிகள் தங்களது மனநிலையில் சிறந்த ஒரு மாற்றம் மற்றும் பல சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் கற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
