Breaking News

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை..!

 வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை..!



மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, ‘முழு நாடுமே ஒன்றாய்’ போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் நேற்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்ட பொலிசார், 100 லீற்ற கசிப்புடன் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் ஆலோசனையின் கீழ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான நேற்று குறித்த சகிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து 100 லீற்றர் கசிப்பை மீட்டனர்.


இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.