Breaking News

12 வது பாடுமீன்களின் சவால் கிண்ணத்தை தனதாக்கியது சிசிலியா பெண்கள் பாடசாலை..!

 12 வது பாடுமீன்களின் சவால் கிண்ணத்தை தனதாக்கியது சிசிலியா பெண்கள் பாடசாலை..!



மட்டக்களப்பின் பிரபலமான பெண்கள் பாடசாலைகளான வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை என்பற்றிற்கிடையிலான பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் கிறிக்கெட் சவால் கிண்ணத்தின் 12 வது அத்தியாயம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.


 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துவீச்சு ஓவர்களையும் எதிர்கொண்டு 8 விக்கட்களை பறிகொடுத்து 100 ஓட்டங்களை சேகரித்தனர். வின்சன் அணி சார்பாக சப்திகா 26 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் சிசிலியா அணி சார்பாக நியோமி 4 பந்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி 11 ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்து 3 விக்கட்களை வீழ்த்தியிருந்தார்.


101 என்கின்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களம் நுழைந்த சிசிலியா பெண்கள் அணியினர் 19 வது பந்துப்பரிமாற்றத்தில் 9 விக்கட்களை இழந்து வெற்றியிலக்கை எட்டிப்பிடித்து ஒரு விக்கட்டினால் வெற்றி பெற்றனர். சிசிலியா அணி சார்பாக அமோரிரா 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 39 ஓட்டங்களை குவித்தார் பந்துவீச்சில் வின்சன் அணி சார்பாக சஹானா 4:விக்கட்களை வீழ்த்தினார்.


இத் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக சிசிலியாவின் அமோரிரா தெரிவானதுடன் சிறந்த பந்துவீச்சாளராக வின்சன் வீராங்கனை சஹானா தெரிவானார். அதிக சிக்சர்களை விளாசிய வீராங்கனையாக 5 சிக்சர்களை பறக்கவிட்ட. அமோரிரா தெரிவானதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக வின்சன் வீராங்கனை நியோமி தெரிவானார்.