மிக சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா..!
மிக சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா பிரதேசம் செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலமையில் இன்று செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, பிரதேச செயலக கொடி என்பன ஏற்றப்பட்டு அணணாவியார் விஜயரத்தினம் அரங்குவரை அழைதுவரப்பட்டு அங்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து தமிழ் தாய்வாழ்த்து, இசைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வரவேற்பு நடனமும், இடம் பெற்றதனை தொடர்ந்து தலமை உரையினை பிரதேச கலாசார பேரவை உப தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் நிகழ்த்தியதை தொடர்ந்து அண்ணாவியார் விஜயரத்தினம் அரங்க தொடக்கவுரையினை திருமதி ஜெயப்பிரசாந்தி திவாகர்
நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் பிரதேச செயலருமான குமாராசாமி பிரபாகரமூர்த்தி நிகழத்தினார்.
அரங்கில் சிறப்பு நிகழ்வுகளாக கிராமிய பாடல்கள், காத்தவராயன் கூத்து, நடனம், நாடகம், மயிலாட்டம், வீதி நாடகம், போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
கருத்துரைகளையும், கௌரவம் மற்றும் பரிசில்கள் சான்றிதழ்களையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான வடமாகாண பண்பாட்டு அலகுகள் பிரிவு பிரதி பணிப்பாளர் வாகினி நிருபராஜ், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ர கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாளினி விஜயரத்தினம், நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னைனாள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரும், பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலருமான இ.த.ஜெயசீலன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதில் சமூக சீர்திருத்த நாடகம் மற்றும் புராண நாடகங்களுக்காக சுப்பிரமணியம் சரவணபவன் அவர்களுக்கும், நாடக எழுத்துரு, இயக்கம், நடிப்பு போற்றவற்றிற்க்காக கந்தாசாமிக் கணேசலிங்கம் ஆகியோருக்கு கலைச்சாகரம் விருதும், நடாசா நவரத்தினம், கிருஸ்ணசாமுவேல் மனோரஞ்சன் ஆகியோருக்கு கலைமருது விருதும், திருமதி சொந்தியா ஜெயசுலக்சன், தேவதாஸ் ஜீடிற்டெனிஸ் ஆகியோருக்கு கலைக்கதிர் இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு கலைஞர்கள், பொதுமக்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.