Breaking News

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

 யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்



யாழ்ப்பாண ம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த

சுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரன் பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.