வடமராட்சி கிழக்கில் அதிகமாக காணி மற்றும் கடல் தொழில் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன இவற்றினை தீர்க்க முடியாமல் இன்னொரு நாள் சந்திப்பை ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...!
வடமராட்சி கிழக்கில் அதிகமாக காணி மற்றும் கடல் தொழில் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன இவற்றினை தீர்க்க முடியாமல் இன்னொரு நாள் சந்திப்பை ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...!
இன்றய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பாராளுமன்ற மன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இக் அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்களின் அபிவிருத்தி சார்ந்த மற்றும் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது முக்கியமாக வடமராட்சி கிழக்கில் காணப்படும் பிரச்சினைகளான காணி மற்றும் கடல் தொழில் சார்ந்த பிரச்சனைகள் எடுத்து காட்டப்பட்ட போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் மற்றும் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே பல முரண்பாடான நிலை காணப்பட்டது
இதனை தீரப்பதற்கும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் அபிவிருத்தி குழு தலைவர்க்கு நேரம் போதாமையால் இப் பிரச்சினைகள் தொடர்பாக தான் உடனடியாக இன்னொரு நாள் சம்மந்தப்பட்டவர்களுடன் சந்திப்பினை ஏற்ப்டுத்துவதாகவும் அதற்கான திகதியினை வெகு விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்
மற்றும் இப் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான வாகனப் புகைப்பரிசோதனை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதோடு வாரத்தில் இரண்டு நாட்கள் புகைப்பரிசோதனை செய்வதற்கும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.