பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு நேற்றைய ஆரம்பம்......!
பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு நேற்றைய ஆரம்பம்......!
பருத்தித்துறை நேற்றைய தினம் (30)சபையின் தவிசாளர் யுகதீஸ் தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது .இருபது உறுப்பினர்களைக்கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில்
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக ஒன்பது உறுப்பினர்களும் ,தேசிய மக்கள் சக்தி சார்பாக. நான்கு உறுப்பினர்களும் ,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக நான்கு உறுப்பினர்களும் ,ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பக -இரு உறுப்பினரும் என இருபது உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் உறுப்பினர்களுக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது