NPP தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறியே காணிகளை சுவீகரித்துள்ளது..! இ.முரளிதரன்
NPP தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறியே காணிகளை சுவீகரித்துள்ளது..! இ.முரளிதரன்
NPP தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறியே காணிகளை சுவீகரித்துள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இரகசியமாக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் தொடர்பாக இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை முதல் முல்லைத்தீவு வட்டுவாகல்வரையான காணிகளே அதிகளவில் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தும் காற்றாலை மின் உற்பத்தியை மேற்கொள்ளவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த முரளிதரன் இதனால் மீனவர்களே அதிகளிவில் பாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.