திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான ஆராயும் கூட்டம் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான ஆராயும் கூட்டம் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதன் போது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தினை அவசரமாக திறத்தல், புதிதாக குருதி சுத்திகரிப்பு (dialysis unit) பிரிவொன்றினை ஆரம்பித்தல் , இயன் மருத்துவப் பிரிவிற்கு தேவையான உபகரணங்களை வழங்கி அதனை திறன்பட இயங்கச் செய்தல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.