Breaking News

வடமரட்சி கிழக்கு உடுத்துறையில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

 வடமரட்சி கிழக்கு உடுத்துறையில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்



யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று (23)மாலை ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது


வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன் திலைக்ஸ் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் உடுத்துறை செந்தமிழ் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தார்


மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வேளை குறித்த விளையாட்டு நிகழ்வை பார்ப்பதற்காக வந்திருந்த இனம் தெரியாதவர்களால் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டுள்ளது


சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


வடமராட்சி கிழக்கில் ஊடக சுதந்திரம் அடக்கப்படும் முயற்சியாக இது காணப்படுவதால் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிசார் விரைந்து கைது செய்யவேண்டுமென அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து

ள்ளனர்.