கடுவெல நீதிமன்ற விவகாரம் முறைப்பாடுகள் வீடியோ காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணை
கடுவெல நீதிமன்ற விவகாரம் முறைப்பாடுகள்
வீடியோ காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணை
நீதிமன்றத்திற்கு விசேட பாதுகாப்பு
கடுவெல மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
விசாரணைகளுக்கு அமைய
அவரது அலுவலக உத்தியோகபூர்வ அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின்
பேரில் சீல் வைக்கப் பட்டுள்ளதாக கடுவெல
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை நீதிமன்ற சக ஊழியர் ஒருவரால் வீடியோ செய்யப்பட்ட
வீடியோ காட்சி ஒன்று நீதிச் சேவைகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது இதன் அடிப்படையிலும் மேற்படி விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதன்படி, நீதி சேவைகள் ஆணைக்குழு நீதிமன்ற அலுவலக அறைக்கு சீல் வைத்து, நீதவானின் சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. நீதிபதி ஷானிமா விஜேபண்டாரவுக்கு தனது உடமைகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுளளது.
இந்த குற்றச்சாட்டு நீதிபதிகளுக்கு எதிராக செயல்படும் ஒரு
குழுவினரின் சதி முயற்சி எனவும் கூறப்படுகிறது மிக முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு
வருகின்ற இந்த
நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் பலதரப்புகளுக்கிடையே
பூசல்கள் இடம்பெற்று வருவது
இவ்வாறான ஒரு விசாரணைக்கு
நீதிமன்றம் உட்படுத்தப்படுவதற்கு காரணம்
எனவும் தெரிவிக்கப்படுகிறது