Breaking News

ஆட்சியமைக்க இணையுமாறு எனக்கும் அழைப்பு வந்தது ! “நான் திருடன் என்பதால் மறுத்துவிட்டேன்”

 ஆட்சியமைக்க இணையுமாறு எனக்கும் அழைப்பு வந்தது ! “நான் திருடன் என்பதால் மறுத்துவிட்டேன்”



எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பல உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க சர்வஜன பவர் கட்சிக்கும் அழைப்பு வந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் சக்தியிடமிருந்து தனக்கும் அதே அழைப்புகள் வந்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.


ஆன்டிஜென்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், தேசிய மக்கள் சக்தி தன்னுடன் கூட்டு சேர்வது நல்லதல்ல என்று அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறுகிறார்.


இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.