Breaking News

இலங்கையில் புதிய கொவிட் 19 அபாயம்: சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

 இலங்கையில் புதிய கொவிட் 19 அபாயம்: சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!



இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 


 அதனைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  


நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொற்றுக்கான மருத்துவ மாதிரிகளைப் பரிசோதிக்கும் சுவாச கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


தற்போதைய அவதானிப்புக்கமைய, கொவிட் 19 தொற்று பரவலில் அதிகரிப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.