பருத்தித்துறை நகரசபையின் கீழ்த்தரமான செயற்பாடுகள் பாதிப்படையும் குடத்தனை கிராம மக்கள்
பருத்தித்துறை நகரசபையின் கீழ்த்தரமான செயற்பாடுகள் பாதிப்படையும் குடத்தனை கிராம மக்கள்
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பருத்தித்துறை நகரசபையினர் அடாவடித்தனமாக நகர சபை கழிவுகளை கொட்டும் சம்பவம் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் உள்ளன
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தெரியவருவது யாதெனில்!...
குடத்தனை மக்கள் பிரதானமாக விவசாய த்தையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் இவர்கள் விவசாய நடவெடிக்கைக்காக பயன்படுத்தும் நிலங்களில் நடுவினிலே இந்த கழிவினை கொட்டுவதாகவும் கூறுகின்றனர்
இதனால் தாம் தொடர்ந்து விவசாய நடவெடிக்கைகளை மேற்கொள்ள இடையூறாக இருப்பதாகவும் கூறுகின்றனர் அது மட்டுமின்றி எதிர்காலத்தில் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பன முற்றாகவே பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதாகவும்
தமது எதிர் காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்
மற்றும் தாம் அவ்விடத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதால் மற்றும் உக்காத கழிவுகள் இருப்பதால் தொற்றாத நோய்கள் பரவுகின்றன எனவும் கூறுகின்றனர்
இது சம்பந்தமாக சம்பந்த பட்டவர்களிடம் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் அடாவடித்தனமாக இந்த செயற்பாடுகளை செய்து வருவதாக கூறுகின்றனர்
ஊர் சார்ந்த பொது அமைப்புகளின் ஊடக மேல்மட்ட இடங்களிலும் முறைப்பாடு செய்தும் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனத்தை தெரிவிக்கின்றனர்
[05/04, 15:19] ஈழ நீதிக்காக ஏங்குபவன்: யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட மாணவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம்..!
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் களவிஜயம் செய்தார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்தார்கள். இதன் போது மாணவர்களை வரவேற்று உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள்,
அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக் கட்டமைப்புகள், இலங்கை நிர்வாக சேவைகள் மற்றும் ஏனைய பதவிகளின் விபரங்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவுகள், சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் மீளக்குடியமர் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பட்டம் பெற்றவுடன் தனியே அரசாங்க வேலைகளை மட்டும் தங்கியிருக்காமல் தனியார் துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்து வாழ்த்தினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்