வடமராட்சி கிழக்கில் 85 குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
வடமராட்சி கிழக்கில் 85 குடும்பங்களுக்கு
உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 10 மணியளவில் ஆழியவளை,உடுத்துறை,வத்திராயன்
கிராமங்களில் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை தெரிவு செய்து
இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் கிளையின் ஏற்பாட்டில் IFRC இன் அனுசரனையுடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களும் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளைத் தலைவர் ச.திரவியராசா ஆளுநர்சபை உறுப்பினர் ந.நாகேஸ்வன் மற்றும் கரவெட்டி பிரிவுத் தலைவர் சி.ரகுபரன் பிரிவு செயலாளர் த.பகிதரன் ஆகியோருடன் தொண்டர்கள் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இவ் நிகழ்வு பிற்பகல் 2 மணிமட்டும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இதில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது