மருத்துவ சான்றித சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...!
மருத்துவ சான்றித சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...!
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவு கையாளும் நிலையத்தினருக்கான மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் வழங்கும், நிகழ்வு இன்றைய தினம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பிருந்திகா செந்தூரன் தலமையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.
இதில் கரவெட்டி பிரதேசத்திற்கு உட்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோறுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதாரக் கல்வியும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், கரவெட்டி பிரதேச உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
