Breaking News

கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை...!


கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை...!



கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளது.


 கடந்த இரண்டு மாதத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சுமார் 60 வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த டெங்கு நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணவாய் பகுதியில் முன்னெடுக்கப் பட்டுள்ளன.


கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், நெல்லியடி போலீசார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் வீடு வீடாக சென்று டெங்கு நோயை காட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் வீட்டுக் காரர்களுக்கு டெங்கு நோயிலிருந்து வருமுன் காத்தல் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு அறிவுறுத்தல் வழங்கினர்.