Breaking News

வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!

 வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!




உயர்தரப் பரீட்சையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதற்பட்டப் படிப்புகளைப் பயிலத் தேர்வான மாணவர்களுக்கு, வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ. 2.5 மில்லியன் வரை அந்நிய செலாவணி சீரமைப்பு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


2025 வரவு செலவுத் திட்டத்தின்கீழ் 32 மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்காக 4 வருட படிப்புக் காலத்திற்குத் தலா ரூ. 80 மில்லியன் வரை அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது.


எனினும், அண்மைக்காலத்தில் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இருக்கவில்லை. எனவே, நாணய மாற்று வீதம் ஸ்திரமடையும் வரை இக்கூடுதல் கொடுப்பனவை வழங்கப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.